/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kanimozhi.jpg)
ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந் தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 8-ந்தேதி சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்று அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பினர்.
அதிமுக அரசை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டிவனத்தில் திமுக மகளிரணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)