dmk protest

Advertisment

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவிலில் வருவாய்க் கோட்டம், அமைக்க வலியுறுத்தி பெரிய ஆர்ப்பாட்டத்தை நெல்லை மேற்கு மாவட்டத்தின் தி.மு.க.வினர் நடத்தினர்.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை நகரின் முப்புடாதி அம்மன் கோவில் திடலில் திரண்டனர். கூட்டத்தில் அய்யாத்துறை பாண்டியன் மற்றும் எக்ஸ் எம்.பி. தங்கவேலு போன்ற நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. மா.செ. சிவபத்நாபன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பதாதைகளை ஏந்தியவாறு நகரின் பல்வேறு நலப்பணிகள், குறிப்பாக சங்கரன்கோவிலில், வருவாய் கோட்டம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மா.செ. சிவபத்மநாபன்... சங்கரன்கோவில் மாவட்டத்தின் தொழில் மற்றும் வியாபாரம் போன்றவைகளில் முக்கியமான நகரம் அப்படி வளர்ச்சியடைந்த நகரின் எதிர்கால நிலை கருதி, முன்னேற்றம் காரணமாக வருவாய்க் கோட்டம் அமைக்க வேண்டும், ஒரு மாவட்டம், அதாவது, தென்காசி மாவட்டமாக்கப்பட்டால் அதற்கு இரண்டு வருவாய் கோட்டம் தேவை எனவே முதலில் இங்கே வருவாய்க் கோட்டம் அமைக்கப்பட வேண்டும். டாஸ்மாக் பார் வைப்பதற்கு சிபாரிசு செய்யும் நகர அமைச்சர், நகரின் வருவாய் கோட்டம் பற்றி சட்டசபையில் பேசவே இல்லை. மக்கள் நலன் பொருட்டு இங்கே வருவாய்க் கோட்டம் அமைய வேண்டும்என்று பேசினார்.