Advertisment

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு; ஈரோட்டில் திமுக ஆர்ப்பாட்டம்

DMK protest protest in Erode against Tamil Nadu's boycott of central budget

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஈரோடு தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் தி.மு.க சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை, ஓட்டல் சிம்னி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் வைத்தார்.

Advertisment

மத்திய பட்ஜெட்டில் தி.மு.க புறக்கணிக்கப்பட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், கவுன்சிலர் வக்கீல் ரமேஷ் குமார், பெருந்துறை கழக ஒன்றிய செயலாளர் சி.பெரியசாமி, முன்னாள் எம்.பி.கந்தசாமி, பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால், மருத்துவ அணி மாவட்ட துணைச் செயலாளர் ஜியாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகரச் செயலாளர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.

Advertisment
budjet Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe