அதிமுக அரசின் ஊழல்களையும், மக்கள் விரோதப் போக்கையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி திமுக தலைமை விடுத்த வேண்டுகோளை ஏற்று மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன், பொன்.முத்துராமலிங்கம், தளபதி எம்எல்ஏ, மதுரை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.