கோவை மாநகரில் சீராககுடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளைவலியுறுத்தி திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் பெண்கள் காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தில்முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன் உள்ளிட்ட பலர்கைது செய்யப்பட்டனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய திமுகவினரைகைது செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.