DMK protest at Chidambaram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது., மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது, சிதம்பரம் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது. சிதம்பரம் நகராட்சியில் வீட்டு வரி உயர்வு இரு மடங்கு உயர்ந்துள்ளது.

Advertisment

ஆக்கிரமிப்பு என்ற பெயர் 300 வீடுகளை இடித்துள்ளனர் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கவில்லை. இதனை கண்டித்து சிதம்பரம் நகர திமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார் . மாவட்ட துணை செயலாளர்கள் அப்பு சந்திரசேகர், விஜயராகவன், இளைஞரணி செயலாளர் அப்பு உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.