குடிநீர் பிரச்சனையை தீர்க்காத தமிழக அரசின் நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.
இதற்கு போட்டியாக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம், சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும்படி அதிமுக தலைமை அறிவுறுத்தியது. அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் வைகுண்ட வாசம் பெருமாள் திருக்கோயிலில் முன்னாள் எம்.பி. தம்பிதுரை, முன்னாள் எம்.பி. ஜெயவர்தன். மற்றும் விருகை ரவி, எம்.எம்.பாபு ஆகியோர் மழைக்காக யாகம் நடத்தினர்.