/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgj_3.jpg)
நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்ததுள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், இந்த விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்ந சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதற்கிடையே தற்போது நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கைஅணிந்து டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)