தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தமிழக எதிர்கட்சித்தலைவரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கி, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு சென்று தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தை மு.க.ஸ்டாலின் பார்த்து வருகிறார். அவருடன் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் படத்தை பார்த்து வருகின்றன.