/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk stalin (5)_16.jpg)
‘மதவாத சக்தியை வீழ்த்தி மாநில உரிமையை வென்றெடுப்போம்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்தி மாநில உரிமையை வென்றெடுப்போம். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகம் பெற்றதை விட இழந்தவை அதிகம். தமிழ் பேசும் மக்கள் வாழும் பல பகுதிகள் அண்டை மாநில எல்லைகளுக்குள் சென்றுவிட்டன. அது தமிழகத்தின் நீர் ஆதாரம் போன்றவற்றிலும் கடுமையான நெடுங்காலச் சிக்கல்களை உருவாக்கிவிட்டது. தமிழ்ச் சான்றோர்கள் கட்டிக்காத்த மொழி - இன உணர்வும், மாநில உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டிய கடமையுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1- ஆம் தேதி நாம் மொழி இன உணர்வுகளுடன் ஒருங்கிணைந்து நிற்போம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us