Skip to main content

“ஸ்டாலின் குறித்து திமுக நிர்வாகிகள் பேசுவதென்ன?”- கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகாசியிலுள்ள தேவர் சிலைக்கு  மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,
 

“ஆணவப்பேச்சு யாரு பேசுறாங்க? எடப்பாடி அண்ணனா பேசுறாரு? இருக்கிற அரசியல்வாதிகள்ல வெளிப்படைத்தன்மையா பேசக்கூடியவர்... உண்மைத்தன்மையா பேசக்கூடியவர்... மனிதநேயத்துடன் பேசக்கூடியவர்.. எல்லாரையும் மதிக்கக்கூடிய அன்பானவர் எடப்பாடியார். இது உலகம் அறிந்த உண்மை. அவர் கூட பழகியவர்கள் அறிந்த உண்மை. ஆனால்.. ஸ்டாலின் பற்றி தி.மு.க நிர்வாகிகள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மற்றவர்களைக் குறை கூற வேண்டும். ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் எடப்பாடியாரை மையப்படுத்தி தாக்கினால்.. ஓபிஎஸ்ஸை மையப்படுத்தி தாக்கினால்.. அதிமுக பிரிவுபட்டு விடும்; பிளவுபட்டு விடும்; சிதைந்துவிடும்; அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்ற கணக்கோடு, இருபெரும் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்.   


அவருடைய நாடகம் எடுபடாது. எடப்பாடியார் ஆணவப்பேச்சு எப்போதும் பேசியது கிடையாது.  நாடாளுமன்ற தேர்தலிலே ஒரு பொய்யான வாக்குறுதியைச் சொல்லி அவர் பெற்ற வெற்றியை வைத்து எந்த அளவுக்கு தம்பட்டம் அடித்தார்கள்.  இந்த ஆட்சியிலிருந்து  உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று எந்த அளவுக்கு கொக்கரித்தார்கள் என்பதை ஊரறியும். ஆணவத்தின் உச்சத்திலே ஸ்டாலின் பேசினார். ஆனால், அடக்கத்தோடு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கருத்து சொல்லக்கூடியவராக இருக்கிறார் எடப்பாடியார். மிகத் தேர்ந்த அரசியல் தலைவராக இன்றைக்கு எடப்பாடியார் விளங்குகிற காரணத்தால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்ப ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். அவரால் இனி புலம்பத்தான் முடியும். பொறுப்பான இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பை தமிழக மக்கள் தரவே மாட்டார்கள். 

DMK PRESIDENT MK STALIN  MINISTER RAJENDRA BALAJI SAID



ஸ்டாலின் கடந்த காலத்தை மறந்துவிட்டார். தாமிரபரணி ஆற்றங்கரையில் பச்சைக்குழந்தைகளோடு ஊர்வலம் போன எத்தனையோ ஏழைப் பெண்களை தண்ணீருக்குள் அமுக்கிக் கொன்றார்கள். குழந்தை சுஜித் குழிக்குள் விழுந்தவுடன் 5 அமைச்சர்கள் 5 நாட்களாக அங்கே முகாமிட்டார்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அரசு எந்த அளவுக்குப் பணியாற்றியது என்பதை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், இந்தியர்கள் அத்தனைபேரும் அறிவார்கள். இன்றைக்கு வைகோ, திருமாவளவன் பேட்டிகூட பார்த்தேன். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியிருக்காங்க. ஸ்டாலின் ஒருவர் மட்டும் பாராட்ட மாட்டார். அவருக்குப் பாராட்டுவதற்கு மனம் கிடையாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வெற்றியால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உருவாகியிருக்கிறது. திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு சேர்வு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டாலின், தன்னைத் திருத்திக்கொண்டால் தமிழக மக்களால் மதிக்கப்படுவார். தொடர்ச்சியாக இதுபோலவே செய்துகொண்டிருந்தால், தமிழக மக்களால் முற்றிலும் ஓரம்கட்டப்படுவார்.
 

உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக டிசம்பரில் நடைபெறும் என்று முதல்வரே சொல்லிவிட்டார். தேர்தல் ஆணையமும் சொல்லிவிட்டது. அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். டாக்டர் சங்க தலைவரே பேட்டி கொடுத்துவிட்டார். நேற்றிரவே வாபஸ் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற உத்தரவாதத்தை முதலமைச்சர் தந்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுவிட்டனர். டாக்டர் தொழில் என்பது மனித நேயமிக்கது. அவர்களின் ஸ்டிரைக்கால் பாதிக்கப்படக்கூடியது பணக்காரர்கள் கிடையாது. ஏழை எளிய மக்கள்தான். அவர்கள்தான் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய இறப்புக்கு எந்த ஒரு டாக்டரும் காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். அரசின் உத்தரவை ஏற்று வாபஸ் பெற்றிருக்கிறார்கள். டாக்டர்கள் மனித நேயம் உள்ளவர்கள் என்பதற்கு உதாரணமாக அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதைச் சொல்லலாம்.” என்றார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.