K. Anbazhagan

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக.

Advertisment

மத்தியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Advertisment

அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது திமுக. இந்தக் குழுவில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.