dmk poongkothai aladi aruna

Advertisment

பூங்கோதை ஆலடிஅருணா,மறைந்ததி.மு.கவைசேர்ந்தமுன்னாள் அமைச்சர் ஆலடிஅருணாவின்மகள்.இவரும்முன்னாள் அமைச்சர்தான். கனிமொழிக்கு மிக நெருக்கமானவராக வலம்வந்த பூங்கோதை, தற்பொழுது ஸ்டாலினுக்கு ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவில்சிகிச்சை பெற்றுவருகிறார்.இவரதுதற்கொலை முயற்சிக்கு, தென்காசிமாவட்டத்தில் தி.மு.கவில்நிலவும்பிரச்சனைகள்தான்காரணம் என்று உடன்பிறப்புகள்சொல்கிறார்கள்.

கடையம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கும் பூங்கோதைக்கும் நீண்ட நெடுங்காலமாகச் சண்டை நடந்துவருகிறது. ஆவுடையப்பன் நெல்லை மா.செவாகஇருந்த பொழுதே, இந்தப் பிரச்சனை அடிக்கடி வெடிக்கும்.இப்பொழுது புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கான நிர்வாகிகள் கூட்டம், சிலதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட பூங்கோதையைக் கடையம்பகுதியைச் சேர்ந்த நிர்வாகி, அந்தக் கூட்டத்திலேயே மிக மோசமாகப் பேசினார். அதை மாவட்டச் செயலாளர் கண்டுகொள்ளவில்லை. மேலும், ஏற்கனவே குடும்பப் பிரச்சனைகளால் மனம் வெறுத்துப்போயிருந்தபூங்கோதை, இரத்த அழுத்தமாத்திரைகளையும், தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிகழ்வு தி.மு.கவில்அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.