Skip to main content

பிப்.21ல் திருச்சிக்கு ஆய்வு செய்ய வரும் ஆளுனர்! - எதிர்ப்புக்கு தயார் ஆகும் தி.மு.க.!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
dmk condemn


இதுநாள் வரை தமிழக அரசியலில் ஆளும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் தான் தமிழகத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக புதிய திருப்பமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ளும் போது, அப்படியே மாநில அரசின் நிர்வாகம் சம்மந்தப்பட்ட, தூய்மை இந்தியா திட்டப்பணிகள் எப்படி செயல்படுகிறது என்றும் ஆய்வு செய்து சரிவர பணி செய்யாத அதிகாரிகளை கண்டிக்கவும் செய்கிறார்.

இது மாதிரியான செயல் மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் செயல் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களின் கண்டணத்தை பதிவு செய்தது. இதில் தி.மு.க. மட்டும் ஒருபடி மேலே போய் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் கருப்புக்கொடி காட்டி தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் திருச்சியில் வரும் பிப்ரவரி 21ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய உள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஆளுநர் திருச்சி செல்கிறார். இதனையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும் ஆளுநர் செல்லும் போது, திருச்சிக்கு வந்த அவரை திருச்சி எம்.பி.சிவா வரவேற்ற போது தி.மு.க. கட்சிக்குள் விமர்சனத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் தற்போது, திருச்சி வரும் ஆளுநருக்கு வலுமையான எதிர்ப்பை காண்பிப்பதற்காக தி.மு.க. தலைமையுடன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- ஜெ.டி.ஆர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசுக்கு எதிராகத் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 minister anbil mahesh who launched the campaign for the central government

திருச்சி கிழக்கு தொகுதியில் 65வது வார்டு ஏர்போர்ட் புதுத்தெரு பகுதியில் ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மக்களிடம் அரசின் திட்டங்களை விளக்கி கலந்துரையாடினார்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று பெண்களிடம் வழங்கிய அமைச்சர், தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறியதோடு குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்தார்.  

“மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதையெல்லாம் மீறி ஒரு நல்லாட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இதனை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் எடுத்து கூறி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மத்திய அரசு வஞ்சித்தாலும் தொடர்ந்து தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும்” என்று கூறினார்.

அப்போது அமைச்சரிடம் தமிழக அரசின் திட்டங்கள் பயனுள்ளதாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ், பகுதி கழகச் செயலாளர் மணிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் பகுதி, வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Next Story

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ex-DMK MLA acquitted in case

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன். மெக்கானிக் தொழில் செய்து வந்த புவனேஸ்வரன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் சையது இப்ராஹிம், செல்வம், முரளி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் இல்லை எனவே இதை ரத்துசெய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு முறையாக விசாரணை செய்யப்பட்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம் உள்ளிட்ட 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் முன்னாள் எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி கே.ரவி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.