சென்னை டிபிஐ அலுவலகம் முன்புபணி நியமனம் வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அதில் அவர்கள் கூறியதாவது; “பார்வையற்றோர் வறுமை, வாய்ப்பின்மை முதலான தடைகளைத் தாண்டிப் படிக்கின்றனர். பட்டங்கள் பல பெற்றும், தகுதித் தேர்வுகள் பலவற்றில் தேர்ச்சிபெற்றும் பணிவாய்ப்பு இல்லாததால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வாடுகின்றோம். அரசின் ஆணைகள் முழுமையாகப் பின்பற்றப்படாததாலும், சில அரசாணைகள் அமல்படுத்தப்படாததாலும் வேலை கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” எனக் கூறினர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு திமுக அமைச்சர் பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவளித்தனர்.