Advertisment

அதிமுக வேட்பாளரை ஜெயிக்க வைக்க திமுக கட்சி கார் கொடியை கிழித்து வீசிய திமுக ஒ.செ

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய்ப்புகள் இருந்த மாவட்ட சேர்மன் மற்றும் அன்னவாசல், கந்தர்வகோட்டை ஒன்றிய சேர்மன் பதவிகளை அதிமுகவுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள். இதைப் பார்த்து உடன்பிறப்புகள் வெந்து நொந்து கட்சி தலைமைக்கு புகார் கடிதங்களையும், ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் கறம்பக்குடியில் அதிமுகவினர் சேர்மன் வாய்ப்பு இருந்தும் உள்கட்சி பூசலை பயன்படுத்தி திமுக சேர்மன் ஆகிவிட்டது.

Advertisment

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் அமமுக கவுன்சிலர்களும் இணைந்து திமுக சேர்மன் ஆக்கும் முயற்சி நடந்தது. அதனால் சீனியரான நியூஸ் ராஜேந்திரனை வேட்பாளராகவும் அறிவித்தார்கள். அதனால் அதிமுக முயற்சியை செய்யவில்லை.

Advertisment

dmk

ஆனால் சில நாட்கள் முன்பு திமுக ஒ.செ தமிழய்யா தான் சேர்மன் ஆக நினைத்து போட்டியிட்டு தோற்றதால் திமுகவில் வேறு யாரும் சேர்மன் ஆகக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி அதிமுக ரெத்தினவேலை பார்த்து காங்கிரஸ், அமமுக கவுன்சிலர்களை அதிமுக பக்கம் கொண்டு வருவதாக உறுதியளித்து அதிமுக வேட்பாளாராக்கிவிட்டார்.

தேர்தல் நாளில்.. திமுக வேட்பாளர் நியூஸ் ராஜேந்திரன் சேர்மன் கனவோடு மாரியம்மன் கோயிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது தன்னை எதிர்த்து நின்று வெற்றி வாய்ப்பை இழந்த மாஜி சேர்மன் அதிமுக காட்டுநாவல் சின்னப்பாவை பார்த்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்கியதுடன் பழைய நட்பில் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டுக் கொண்டனர். நீ வெற்றியோட வா என்று அதிமுக காட்டுநாவல் சின்னப்பா வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

ஆனால் திமுக ஒ.செ தன்னிடம் இருந்த காங்கிரஸ், அமமுக கவுன்சிலர்களை தனது காரில் வாக்குப்பதிவுக்காக அழைத்துச் செல்ல தயாரான போது காரில் திமுக கொடி அவர் கண்ணை உறுத்தியது. அதனால் ஆவேசமாக அந்த கொடியை கிழிக்க முயல முடியவில்லை. ஆனால் அருகில் நின்ற உ.பி அந்த கொடியை ஒரே இழுப்பாக இழுத்து அறுத்துவிட்ட பிறகு காங், அமமுக கவுன்சிலர்களை அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க அழைத்துச் சென்று அதிமுக வேட்பாளர் ரெத்தினவேலை வெற்றி பெறச் செய்துவிட்டு வந்தார்.

இதைப் பார்த்த உடன்பிறப்புகள் இன்னும் இது போன்ற ஒ.செ க்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக கட்சித் தலைமையும், மாவட்ட தலைமையும் தயங்குவது ஏனோ என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

local election Pudukottai admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe