Published on 01/01/2021 | Edited on 01/01/2021

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பஞ்சாப்பை தொடர்ந்து கேரள சட்டமன்றத்திலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 37 நாட்களாக பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.