Advertisment

"ஒவ்வொரு நொடியும் கோல்டன் பீரியட்" - மு.க.ஸ்டாலின்!

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் ஊரடங்கு குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள். ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்துக்குத்தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

எம்எல்ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் பீரியட்தான்; அதைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். தனித்திருத்தல் மட்டும் தான் மக்களால் செய்ய முடிந்தது; மற்ற அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்ய வேண்டும். கரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனை தர, ஒத்துழைக்க, உதவி வழங்க திமுக தயாராக உள்ளது." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cm palanisamy letter mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe