Advertisment

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் நடிகர்: மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தல், கூட்டணி இடப்பகிர்வு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

dmk party president mk stalin speech

ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "சிஏஏ, என்பிஆர்-க்கு எதிராக என்ன செய்யலாம் என வரும் 24- ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும். நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் நடிகர். பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் யோசித்து பேசியிருக்க வேண்டும்" என்றார்.

Actor Rajinikanth Speech mk stalin DMK PARTY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe