'DMK is a party with a PhD in impersonation' - EPS Chatal

'கபட வேடம் போடுவதில் பிஎச்டி பெற்ற கட்சி திமுக' என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என் பேட்டிக்கு பதில் சொல்லாமல். பெயரே இல்லாமல் ஒரு அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. வெந்ததை தின்று வாய்க்கு வந்தபடி உளறி திரிபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல மனம் போன போக்கில் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 42 மாத திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாது பற்றி திருச்சியில் நான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்தேன். பிரதான எதிர்க்கட்சி என்பது நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக் காட்டும் குறைகளை நேர்மையான அரசு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். என் பேட்டிக்கு பதில் சொல்லாமல். பெயரேஇல்லாமல் ஒரு அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. கபட வேடம் போடுவதில் பிஎச்டி பெற்ற கட்சி திமுக' என விமர்சித்துள்ளார்.

Advertisment