Advertisment

கலைஞரின் இறுதி சடங்கை டிவியில் பார்த்த தொண்டன் மாரடைப்பால் மரணம்!

kalaignar

Advertisment

திருத்துறைப்பூண்டி அருகே திமுக தலைவர் கலைஞரின் இறுதி சடங்கை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த திமுக தொண்டர் ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜரத்தினம் மகன் ஜெயராமன்(48). இவர் தீவிர திமுக தொண்டர் ஆவார் கட்சி பணிகளில் ஈடுபாடு கொண்டவர். திருத்துறைப்பூண்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிரி இறுதி சடங்கு நிகழச்சியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த போது மனம் சங்கடம் ஏற்பட்டு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஜெயராமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் ஆனால் அவர் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisment

கலைஞர் இறுதி சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும் போது திமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe