திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

Advertisment

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக இரண்டு நாட்கள் முன்னதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கலைஞரின் உடல் நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் வீட்டில் வைத்தே தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தமீம் (50) திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தமீம் வேதனையில் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.