ADVERTISEMENT

செந்தில் பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்!

09:03 PM Jan 31, 2020 | santhoshb@nakk…

2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார்.

ADVERTISEMENT


அதன் அடிப்படையில் சென்னை போலீசார் கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். திருவண்ணாமலையிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவருடைய தம்பி அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் வீட்டில் சொத்து ஆவணங்கள், நகைகள், லேப்டாப், வங்கி காசோலைகள், வங்கிக் கணக்குகள், வங்கி இருப்பு பெட்டக சாவிகளும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுயவிவர குறிப்புகள் அடங்கிய பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 9 இடங்களிலும், திருவண்ணாமலையில் 2 இடங்களிலும், கரூரில் 5 இடங்களிலும், கும்பகோணத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT