ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம் பற்றி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், "பாரத் நெட் திட்டத்தில் முறைகேடு என ஆதாரமற்ற கற்பனையான பொய்யை கூறுகிறார் ஸ்டாலின்.

Advertisment

dmk party mk stalin ask question minister udhayakumar reply

பாரத் நெட் திட்டத்திற்கு தற்போது தான் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ஒப்பந்தப்புள்ளி, விலைப்புள்ளி பெறாத நிலையில் ஊழல் எனக்கூறுவது விந்தையாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் இருந்து பேசி வருகிறார். திமுக ஆட்சிக்காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் என்பது நடக்காத நிகழ்வா என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.