dmk party meeting mk stalin speech

Advertisment

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், "இன்னும் 8 மாதங்களில் தி.மு.க. ஆளுங்கட்சியாகும். துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கலைஞர்மகிழ்ச்சி அடைவார். துரைமுருகன், டி.ஆர்.பாலுவை பார்க்கும்போது கலைஞரின்முகம் தான் எனக்குத் தெரிகிறது. அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்தப் பதவி துரைமுருகனுக்கு வந்துள்ளது. துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் தி.மு.க.வில் படிப்படியாக உயர்ந்து இந்நிலையை அடைந்துள்ளனர்.

dmk party meeting mk stalin speech

Advertisment

ஒன்பது முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்.சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.

மிசா காலத்தின்போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு. 'வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவர்' என கருணாநிதியால் பாராட்டப்பெற்றவர் பாலு. கலைஞருக்காகஉயிரையும் கொடுக்கக் கூடிய தி.மு.க.வின் போர்வாள் டி.ஆர்.பாலு.

dmk party meeting mk stalin speech

Advertisment

டி.ஆர்.பாலு ஆறு முறை மக்களவை எம்.பி, மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்தவர். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பயன்படும். ஆ.ராசாவும், பொன்முடியும் தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். ஆ.ராசா ஐந்து முறை எம்.பி., பொன்முடி ஐந்து முறை எம்.எல்.ஏ. என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களானது மிகுந்த மகிழ்ச்சி.

ஆ.ராசா, பொன்முடி தங்களது அறிவை, திறமையை தி.மு.க. வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். 'தகத்தகாய சூரியன்' என ஆ.ராசாவை பாராட்டியுள்ளார் கலைஞர்.செப்டம்பர் 15- ஆம் தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழாவும் இதேபோல் எளிமையாகவே நடைபெறும். சட்டமன்ற தேர்தலுக்காக முழுமையாக உழைக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது”இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் தன்னை புகழ்ந்து பேசியதைக் கேட்டு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.