dmk party meeting mk stalin

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக்காட்சிமூலம் தொடங்கியது.

Advertisment

தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க.பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்படுகின்றனர்.

அதேபோல் தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளராக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மேலும் பொதுக்குழுவில் தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.