திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம்!

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

dmk party leaders changed salem and namakkal district

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதியும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து வீரபாண்டி ராஜா விடுக்கப்பட்டு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக எஸ்.ஆர். சிவலிங்கமும், நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த செ.காந்திசெல்வன் விடுவிக்கப்பட்டு, அந்த பொறுப்பில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரும்நியமனம் செய்யப்பட்டுள்ளனர்." இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

DMK PARTY leaders namakkal Salem
இதையும் படியுங்கள்
Subscribe