dmk party k.n.nehru high court madurai bench

Advertisment

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது பற்றி தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான கே.என்.நேரு பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி சர்ச்சையானது.

வீடியோ தொடர்பாக, திருச்சி மாவட்ட முசிறி காவல்துறையினர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கே.என்.நேரு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.