சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு, "தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையை ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். 75 நாட்களில் 15 தலைவர்கள் 10 லட்சம் பேரை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியின் குறைகளை எடுத்துரைப்பர். அமித்ஷா வருகையைக் கண்டு அ.தி.மு.க. அமைச்சர்களே பயப்படாத நிலையில் நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று தி.மு.க. வெற்றி பெறும்" என்றார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை தேதியை அறிவித்த கே.என்.நேரு...
Advertisment