Advertisment

ஜே.என்.யு மாணவர் சங்க தலைவியுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

 dmk party kanimozhi mp meet with jnu student union president

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்தது. இந்நிலையில், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷ் கோஷ் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 4- ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் கணினி சர்வர் அறைக்குள் புகுந்து அதனை சேதப்படுத்தியதாக ஆய்ஷ் கோஷ் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இதனிடையே திமுக எம்.பி கனிமொழி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவி ஆய்ஷ் கோஷை சந்தித்தார். அப்போது ஜனவரி 5- ஆம் தேதி மாணவர்கள் மீது எப்படி தாக்குதல் நடந்தது என்பது குறித்து கனிமொழி கேட்டறிந்தார்.

Delhi DMK PARTY JNU STUDENTS kanimozhi mp
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe