Advertisment

திமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்!

திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (10/11/2019) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

 DMK PARTY General Meeting Begins

அதன் பிறகு மறைந்த திமுக உறுப்பினர்களுக்கும், லாரி மோதிஉயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என 3000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

Advertisment
Chennai (310 DMK PARTY GENERAL MEETING Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe