DMK Ordinance Prohibition-Unemployed Graduates Shocked!

Advertisment

தமிழக செய்தித்துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பதவிகளை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனங்கள் மூலம் 50 சதவீதமும் நிரப்புவதற்கான அரசாணையை கடந்த ஆகஸ்ட் 1 -ந்தேதி பிறப்பித்தது திமுக அரசு.

இந்த அரசாணையை அரசு பணியாளர்களும் வேலையில்லா பட்டதாரிகளும் மகிழ்ச்சியாக வரவேற்றிருந்தனர். ஆரோக்கியமான நிர்வாகத்துக்கு வழிவகுப்பதாகவும் அவர்கள் தரப்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், திமுக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக மயிலாடுதுறையை சேர்ந்த மாசிலமணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரருக்காக இந்த வழக்கை தாக்கல் செய்தவர் திமுக எம்.பி. வில்சன்.

அந்த வழக்கின் விசாரணையின் போது, ’’உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டு, பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும் என்பதால் அரசு தேர்வாணையம் மூலம் பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது‘’ என்று வாதிட்டார் வில்சன்.

Advertisment

DMK Ordinance Prohibition-Unemployed Graduates Shocked!

இதனை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம், தற்காலிக தடை வழங்கியுள்ளது. வழக்கும் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டே கொடுக்கப்பட்டதையறிந்து வேலையில்லா பட்டதாரிகளும், அரசு பணியாளர்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய வேலையில்லா பட்டதாரிகள், ‘’தமிழக செய்தித்துறையில், தகுதியான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை தர வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான ஒரு அரசாணையை பிறப்பித்தது திமுக அரசு. இதன் மூலம், செய்தித் துறைக்குள் ஜர்னலிசம் படித்த பட்டதாரிகள் உள்ளே வருவதற்கு வழி பிறந்தது. ஆனால், திமுக அரசின் அரசாணைக்கு எதிராக, திமுக எம்.பி. ஒருவரே தடை பெறுகிறார். அரசாணையையும் போட்டுவிட்டு ஸ்டேவும் வாங்குகிறார்களோ என தோன்றுகிறது. இந்த தடையாணையை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

Advertisment

இது குறித்து வழக்கறிஞர் வில்சனிடம் நாம் கேட்டபோது, " வழக்கறிஞர் என்பது என் தொழில். தொழில்ரீதியாக ஆஜரானேன். அரசுக்கும் தொழிலுக்கும் சம்மந்தமில்லையே!" என்கிறார்.