Skip to main content

என்.எல்.சி-யில் தமிழர்கள் புறக்கணிப்பு! - நாளை திமுக ஆர்ப்பாட்டம்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

DMK oppostion  against the neglect of Tamiians in NLC tomorrow !!

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

 

அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று தனது இணையத்தில் வெளியிட்டது. இந்த 1,582 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். என்.எல்.சி நிறுவனத்தில் இந்த தமிழர் விரோதப் போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்தின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் GET (Graduate Executive Trainee) காலிப் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வில் கலந்துகொண்ட ஒரு லட்சத்திற்கும் மேலானோரில், நேர்காணலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,582 நபர்களில், 99% வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், தமிழகத்தில் 1% நபர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

DMK oppostion  against the neglect of Tamiians in NLC tomorrow !!

 

என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படும் போது கடலூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழக இளைஞர்களை அடியோடு புறக்கணித்த என்.எல்.சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டித்து, எழுத்துத் தேர்வை ரத்துசெய்து நியாயமான முறையில், தேர்வு நடைபெற வலியுறுத்தி கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

 

என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஓய்வு பெறும் பணியாளர்களின் இடம் காலியாக உள்ளது. அப்படி காலியாக உள்ள இடங்களில் பணி நியமனம் செய்யும்போது நிறுவனத்திற்காக நிலம், வீடு கொடுத்தவர்களுக்கும், பணியின்போது உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கும், பணிசெய்து ஓய்வுபெற்ற வாரிசுதாரர்களின் குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. என்.எல்.சியில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகப் பணி வழங்கப்படாமல் உள்ளது. 

 

அதுபோலவே என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதால், அவர்கள் நியமிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், வட இந்தியாவைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், மனித வளம், நிதி உளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு என 259 பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று நிறுவன இணையத்தில் பட்டியல் வெளியிட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் என ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே தேர்வு செய்யய்யட்டுள்ளனர். இது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

 

என்.எல்.சி நிறுவனத்தின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, ஆகவே என்.எல்.சி நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வை ரத்து செய்யவும், புதியதாக எழுத்துத் தேர்வை நடத்த வலியுறுத்தியும், அதில் தமிழக இளைஞர்களுக்கு, அதுவும் குறிப்பாக கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கும், என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கும், ஓய்வுபெற்ற குடும்பங்களின் வாரிசுகளுக்கும், என்.எல்.சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டி, நாளை (09.02.2021) அன்று காலை 9.00 மணி அளவில் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 8, பெரியார் சதுக்கம் அருகில் கடலூர் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 

அதே சமயம் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளர் அணி, மகளிரணி, தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகிய அணிகளின் நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மணல் மேட்டிலிருந்து வெளியேறும் வெள்ளத்தால் வீடுகள், விவசாய நிலங்கள் சேதம்!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

Damage to houses and agricultural lands due to floods coming out of the sand dunes

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கங்களின் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில் வெட்டப்படும் மண்ணானது, நெய்வேலி பகுதியைச் சுற்றி மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ள மணல் மேட்டிலிருந்து வெளியேறக் கூடிய மழைநீர், காட்டாற்று வெள்ளம் போல் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளையும், விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்துவருகிறது. மேலும், மணல்மேட்டின் ஒரு பகுதியான கம்மாபுரம், கீணனூர், கோபாலபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் என்.எல்.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கின.

 

Damage to houses and agricultural lands due to floods coming out of the sand dunes

 

இதனால் பயிர்கள் அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், மணல் மேட்டிலிருந்து வரக்கூடிய மழை நீருடன், சவுட்டுத் தன்மைகொண்ட மணலும் விவசாய நிலங்களில் படிவதால் மண்ணின் வளம் முற்றிலுமாக மாறுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதேபோல், மணல்மேட்டின் மறுபகுதியான ஊமங்கலம், வெளிக்கூணங்குறிச்சி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாய்க்கால்கள் சரியாக அமைக்கப்படாததால், காட்டாற்று வெள்ளம் போல் மழை நீரானது கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவருவதால் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்துவருகின்றனர்.

 

மேலும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் வசிப்பதற்குப் போதிய இடம் இல்லாமல் தவித்துவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மணல் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலைத் தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை உடனடியாக பாதுகாக்கவில்லை என்றால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

Next Story

என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தில் வர்த்தக ரீதியாக மின் உற்பத்திக்கு அரசு அனுமதி!! சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் சாதனை...

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

Government approves commercial power generation at NLC's new thermal power plant !! Achievement in solar power generation ...

 

நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி பிரிவிலிருந்து வர்த்தக ரீதியாக மின் சக்தியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் மணிக்கு 10 லட்சம் யூனிட் (1000 மெகாவாட்) மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவு வர்த்தக ரீதியான மின்சக்தியை விற்பனை செய்ய 2019 டிசம்பர் 28-ஆம் தேதி தகுதிபெற்றது. அதனைத் தொடர்ந்து 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது பிரிவும் நேற்று முன்தினம் (10.02.2021) நள்ளிரவு முதல் மின்சக்தியை விற்பனை செய்ய மத்திய அரசிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

 

இதன்மூலம் ‘அனல்மின் திட்டம்’ என்ற நிலையில் இதுவரை இருந்து வந்த இந்த மின் நிலையம், தற்போது ‘அனல் மின் நிலையம்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய அனல் மின்நிலையம் வர்த்தக ரீதியாக இயங்க அனுமதி பெற்றதன் மூலம் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் உற்பத்தி அளவானது அதன் துணை நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 4,640 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மின்சக்தி நிலையங்களையும் சேர்த்து மொத்த மின் உற்பத்தி அளவு 6,061 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சூரிய ஒளி மின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 61.60 சதவீதம் வளர்ச்சி பெற்று என்.எல்.சி இந்தியா நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

 

Government approves commercial power generation at NLC's new thermal power plant !! Achievement in solar power generation ...

 

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 144 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவை ஒப்பிடுகையில் 60.60 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் என்.எல்.சி மின்நிலையங்களில் 1,374 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவில் சில மாதங்களும், 709 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் நிலையங்களில் 9 மாதங்களும் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,110 கோடியே 99 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் வருவாயும், நிகர லாபமாக 386 கோடியே 99 லட்சம் ரூபாயும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் ஈட்டியுள்ளது.