Advertisment

'திமுக' அதிகார்வப்பூர்வ வெற்றி; டெபாசிட் இழந்த 'நாம் தமிழர்'

'DMK' Official Victory; 'Nam Tamil' lost deposit

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள்எண்ண திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. தொடர்ந்து 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றதால் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியைத் தக்க வைத்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெறுவோர் டெபாசிட் தொகையை தக்க வைப்பர். அதன்படி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு 25,777 வாக்குகள் பெற வேண்டிய நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை பெற முடியாததால் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75% வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ளது.

திமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை-1,17,158, நாம் தமிழர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை-23,872.

byelection Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe