தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றவர் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரான வேலுச்சாமி.

Advertisment

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற 37 பேரில் 5 லட்சத்திற்கு மேல் கூடுதாலக ஓட்டு வாங்கி வெற்றி பெற்றதும் வேலுச்சாமி அதனாலேயேதலைவர் ஸ்டாலினும் எம்.பி.வேலுச்சாமிக்கு நினைவு பரிசு கொடுத்து பராட்டியும் இருக்கிறார்.

 DMK MPs Request to stop trains at Dindigul Ottanchathiram

 DMK MPs Request to stop trains at Dindigul Ottanchathiram

Advertisment

இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்தவும், புதிய வழித்தடங்களை உருவாக்கித் தரவும், நிறுத்தம் செய்யாமல் சென்று கொண்டிருக்கின்ற இரயில்களை நிறுத்தி செல்லவும், குறிப்பாக நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் இரயிலை ஒட்டன்சத்திரம் இரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்யவும், தேஜஸ் இரயிலை திண்டுக்கல்லில் நிறுத்தம் செய்ய வேண்டியும் போன்ற அனைத்து கோரிக்கைகளையும் சென்னையில் உள்ள தென்னக இரயில்வே தலைமை அலுவலகத்திலும், புதுடெல்லியில் உள்ள இரயில்வே தலைமையகத்தில் இரயில்வே போர்டு சேர்மன் வினோத் குமாரையும் சந்தித்தும் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.