Advertisment

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்த திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள்!!

 DMK MPs, MLs congratulate Ganesha Chaturthi

விநாயகர் சதுர்த்திக்கு தி.மு.க எம்.பிக்கள்,எம்,எல்,ஏக்கள், நிர்வாகிகள் சிலர் சமூக வலைத்தளத்திலும், போஸ்டர்கள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Advertisment

தி.மு.க. தலைமையின் மீது நீண்ட நாட்களாக வைக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் விமர்சனங்களில் ஒன்று இந்து மத விழாக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதில்லை என்ற நிலைப்பாடு.இந்நிலையில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார்,காந்தி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிற்றரசு ஆகியோர் விநாயகர் சதுர்த்திக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,தி.மு.க. தலைமை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கூறக்கூடாது போன்ற எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பதாக தி.மு.க. நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அண்மையில் கறுப்பர் கூட்டம் எனும் யூ-ட்யூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிவீடியோவெளியிட்டவர்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டுஎழுந்து வந்த நிலையில் தற்பொழுது தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் சிலர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MLA vinayagar chaturthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe