dmk mps meeting at chennai mk stalin tweet

Advertisment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்,சென்னையில் உள்ள தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (26/01/2021) மதியம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

dmk mps meeting at chennai mk stalin tweet

எம்.பி.க்கள் கூட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'தி.மு.க. எம்.பி.க்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தங்களின் நன்னம்பிக்கைக்கேற்ப செயலாற்றுவதை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள். அடிமைத்தனத்தில் மூழ்கியிருப்போருக்கு அது தெரிவதில்லை. சட்டமன்றத் தேர்தல் வெற்றியும் தமிழக மக்களின் நலனுக்காக அமைய உழைக்குமாறு எம்.பி.க்களைக் கேட்டுக் கொண்டேன்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் பதிவிட்டுள்ளார்.

Advertisment

dmk mps meeting at chennai mk stalin tweet

அதில், தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக எதிரொலித்தோம். புதிய கல்விக்கொள்கை, இட ஒதுக்கீடு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் எதிர்ப்பை பதிவு செய்தோம். புதிய வேளாண் சட்டம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. இந்தி விவகாரத்திலும் எதிர்ப்பை பதிவு செய்தோம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரு அவைகளிலும் வலிமையாகக் குரல் கொடுப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.