/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zxvxvxv.jpg)
திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
சிறையில் இருப்பவர்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களைவிட போலீசாரால் தாக்கப்பட்டு உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரிக்குமோஎன்ற கவலைஏற்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை, மகன் இழப்பு விவகாரத்தை அரசு முறையாக கையாளவில்லை எனில், திமுக நீதிமன்றத்தை நாடும். எதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாத ஆட்சியாக இந்த அதிமுக ஆட்சி உள்ளது. காவலர்களை காப்பாற்ற முதல்வர் முயற்சிக்கிறார் என்றார்.
Follow Us