பரந்தூர், ஓசூர் விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.பி; எழுத்துபூர்வ பதிலளித்த மத்திய அரசு

DMK MP questioned about Parantur, Hosur Airport; Written Respondent Central Govt

தமிழ்நாட்டில் பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் விவரம் தொடர்பாக மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. கிரிராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மொகல் அளித்த எழுத்துப்பூர்வமா பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில், 'காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான தள அனுமதியைப் பெற சிவில் விமான போக்குவரத்துத் துறையிடம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) விண்ணப்பித்து இருந்தது. இதன்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் தள அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொள்கை ஒப்புதலுக்கான விண்ணப்பம் டிட்கோவிடம் இருந்து பெறப்பட்டு இருக்கிறது.

ஓசூரில் பசுமை விமான நிலையத்துக்காக முன்மொழியப்பட்ட 4 தளங்களை விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் டிட்கோ அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு செய்தது. அந்த பகுதியில் விமானப்படை மையம் இருப்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் தள அனுமதி வழங்க நிபந்தனைகளுடன் தடையில்லா சான்று வழங்கி இருக்கிறது' இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

airport Hosur paranthur
இதையும் படியுங்கள்
Subscribe