தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நாளை மறுநாள் (23.09.2025) நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை -மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது, தி.மு.க. மக்களவை -மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.