ADVERTISEMENT

பிறமாவட்ட பாதிப்புடன் போட்டிபோட டாஸ்மாக் திறக்கப்படுகிதா? திமுக எம்.பி கனிமொழி கேள்வி

03:15 PM Aug 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் சென்னையில் திறக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்ற நிலையில், திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளைத் திறப்பது ஏன், பிறமாவட்ட கரோனா பாதிப்புடன் சென்னை போட்டிபோட வைக்க டாஸ்மாக் திறக்கப்படுகிதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில், மதுக்கடையில் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும். மதுப்பிரியர்கள் நிற்க சாமியானா பந்தல் அமைக்க வேண்டும். அதேபோல் அறிவிப்புகளை வெளியிட மைக்செட் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதேபோல் டாஸ்மாக் கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT