Advertisment

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 600 ஆடுகள்.. உடனடி நிவாரணம் வழங்க ஆட்சியருக்கு கடிதம் எழுதிய எம்.பி..!

DMK MP Gowthama sigamani requested to collector

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத்தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வட்டம், பாவளம் கிராமத்தில்,600 ஆடுகள்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.இந்நிலையில், 'ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்' என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி கடிதம் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வட்டம், பாவளம் கிராமத்தில் வெள்ளேரி ஒடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அப்பகுதி விவசாயிகளின் பழனி, அஞ்சலை முனுசாமி, கருத்தாப்பிள்ளை ஆகியோரின் 600க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனை அறிந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கடிதம் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

gowthama sigamani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe