
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தனி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர் அம்பேத்குமார். வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராகவும் உள்ளார்.
இவரின் தம்பியும், வந்தவாசி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான பிரபு இன்று விடியற்காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்ற நிலையில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. 34 வயதாகும் பிரபுவுக்கு 2022 நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்ளது. தற்போது நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் ஒ.செ வாக முதல் முறையாக தேர்வாகி கட்சி பணியாற்றி வந்தார். இளம் வயதில் நெஞ்சுவலியால் இறந்தது வடக்கு மாவட்ட திமுகவினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.