கரோனா தொற்று காரணமாக கடந்து மார்ச் மாதம் சட்டப்பேரவை கடைசியாக கூடியது. அதன்பிறகு இன்று முதல் (14/9/2020) மூன்று நாட்கள் கரோனா தொற்று காரணமாக தலைமை செயலகத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாது என்பதனால் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்காக அ.தி.மு.க, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தனர்.
இதில், தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏக்கள். "நீட் தேர்வை ரத்து செய்" என்று வசனம் பொருந்திய முகக்கவசம் அணிந்துகொண்டு கலைவாணர் அரங்கத்தினுள் சென்றனர்.