DMK MLAs meeting ... Date announcement

Advertisment

மார்ச் 18 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 18 ஆம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அரசு கொறடா கோவி.செழியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளன்று எம்.எல் .ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் அதனடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டமானது நடைபெற இருக்கிறது. பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் யார் யார் பங்கேற்பது, விவாதங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் 19 ஆம் தேதியா அல்லது 21 ஆம் தேதியா என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.