dmk mlas meeting at chennai

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (18/03/2022) மாலை 06.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொகுதி வளர்ச்சிப் பணிகள், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்டவைகுறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.