Advertisment

திமுக மா.செ., எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம்

Anna Arivalayam

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அன்றைய தினம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புக்கான இடஒதுக்கீடு தொகுதி பட்டியலை பெற்றுக் கொண்டு, அவரவர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்டு, ஊராட்சி, பேரூர், ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக ஆய்வு செய்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலை சரிபார்த்து, அதில் மாற்றம் செய்ய வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் விவரங்களை இம்மாத இறுதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று நேற்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் திமுக பொறுப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

MLA MP anna arivalayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe