Advertisment

திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை -பிறமாநிலத்தில் உள்ள தமிழர்களிடம் வீடியோ வழியாகப் பேசி உதவிய கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில்5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிக்கித் தவிக்கும் தகவல் சமூக வளைத்தளங்கள் மூலமாக திமுக மா.செவும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான முன்னால் அமைச்சர் எ.வ.வேலு கவனத்துக்குச் சென்றது.

Advertisment

44

அதேபோல் திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளதை அறிந்தார். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் உதவ வேண்டும், அவர்களை அவர்களது ஊருக்கு அழைத்து வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி அதனைத் தனது மகனும், கலசாப்பாகம் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளருமான மருத்துவர் கம்பனிடம் தந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியிடம் நேரில் தருமாறு அனுப்பினார். அந்தக் கடிதத்தை கம்பன், கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று வழங்கினார்.

Advertisment

கடிதத்தை வாங்கிய கலெக்டர் அதுப்பற்றி விசாரித்து மாவட்ட நிர்வாகம் உதவும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் யார், யார் என விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் விசாரணை நடத்தி ஒரு பட்டியலைத் தந்தனர். அவர்களிடம் ஏப்ரல் 18-ந்தேதி மாலை மொபைல் ஆப் மூலமாக வீடியோ கான்பரஸில் பேசி, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார்.

http://onelink.to/nknapp

உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அழைத்து வர முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி சோதனைச் சாவடிகள் உள்ளன. இது அரசு உத்தரவுப்படி போடப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்கள் தவிர மற்ற எதற்காகவும் தொழிலாளர்கள் இடம் பெயர முடியாது. அதனால் நீங்கள் அங்கேயே பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளன. அது போதுமானதாக இல்லை எனச்சொல்லினர், மேலும் தாங்கள் கூலி வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த காசும் காலியாகிவிட்டது எனத் தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படும் என ஆறுதல் கூறினார். மேலும் ஏதாவது உதவி தேவையென்றால் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி, வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் யார், யார் என்கிற பட்டியல் எடுத்து அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கி அவர்களது கணக்கில் தலா ஆயிரம் ரூபாய் நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அது அவர்களது உணவுப் பொருட்கள் பெற உதவியாக இருக்கும். மற்ற உதவிகள் அவர்கள் கேட்கும்போது செய்யப்படும் என்றார்.

collector corona virus MLA tiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe