குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள சைக்கிளில் சென்ற திமுக எம்எல்ஏ.

mano thangaraj_0.jpg

மத்தியில் மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை ரத்து செய்து அதை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 62 நாட்களாக தொடா்ந்து டெல்லியில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனா். மத்திய அரசு விவசாயிகளிடம் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், நேற்று (26.01.2021) குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய வன்முறையில், விவசாயி ஓருவா் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் அந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்தும் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் நாகா்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 18 கிமீ தூரம் சைக்கிளில் சென்றார். இதற்காக அவா் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட மணலியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் சைக்கிளில் சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் உள்ள பொதுமக்கள் ஆதரவு கொடுத்ததுடன், எம்எல்ஏ ஓருவா் விவசாயிகளுக்கு ஆதரவாக சைக்கிளில் செல்வதை ஆச்சா்யத்துடன் பார்த்தனா்.

ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி மனோ தங்கராஜ் எம்எல்ஏ தக்கலையில் இருந்து நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் வரை 17 கிமீ நடந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK MLA Farmers Protest
இதையும் படியுங்கள்
Subscribe