Skip to main content

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ., - எம்.பி.க்கள்..!

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
 


கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ., - எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழக தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை "கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக" அளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்